Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பியன் கிண்ண அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும்: பிராட் ஹொக்

In கிாிக்கட்
Updated: 09:05 GMT, May 1, 2017 | Published: 08:07 GMT, May 1, 2017 |
0 Comments
1275
This post was written by : Elakkiya

சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹொக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரில் குல்தீப் யாதவால் திறம்பட விளையாட முடியும். சிறந்த கிரிக்கட் வீரர்களாலேயே வெளிநாட்டு நிலைமைகளுக்கு ஏற்ப விளையாட முடியும். குல்தீப் யாதவ் வித்தியாசமான பந்துவீச்சாளர். இவரைப்போன்ற பந்து வீச்சாளர்கள் தற்போது உலக கிரிக்கெட்டில் பெருமளவில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள குல்தீப் யாதவ், தொடரில் இதுவரையான போட்டிகளில் பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை. எனினும் குல்தீப் யாதவின் பந்துவீச்சு திறன்களை பகுத்தறிந்து கூறும் பிராட் ஹொக் சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரிற்கான இந்திய அணியில் யாதவ் தெரிவுசெய்யப்பட்டால் இந்திய அணிக்கு பெரும் பங்காற்றுவார் என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg