Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் இந்தியா விஜயம்

In ஐரோப்பா
Updated: 09:24 GMT, May 1, 2017 | Published: 08:18 GMT, May 1, 2017 |
0 Comments
1342
This post was written by : Sylviya

துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது துணைவி எமினே எர்டோகனுடன் (Emine Erdoğan) இந்தியாவை சென்றடைந்த எர்டோகனுக்கு இந்திய அதிகாரிகளால் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, இராணுவ மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் எர்டோகன் பேச்சுவார்த்தை நடத்துவார்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை எர்டோகன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மோடியுடனான பேச்சுவார்த்தையின் போது துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg