Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியின் பாராட்டுக்கு முன்னாள் எதுவும் பெரிதில்லை: ராஜமௌலி புகழாரம்

In சினிமா
Updated: 12:24 GMT, May 1, 2017 | Published: 12:24 GMT, May 1, 2017 |
0 Comments
1409
This post was written by : Shailu

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘பாகுபலி-2’. இப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த வரவேற்பு படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு, பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் படக்குழுவினரையும், இயக்குனர் ராஜமௌலியையும் பாராட்டியிருந்தார். அவரின் பாராட்டு செய்தியில், ‘பாகுபலி-2′ படம் இந்தியாவின் பெருமை. கடவுளின் குழந்தையான ராஜமௌலிவுக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என தெரிவித்திருந்தார்.

ரஜினியின் பாராட்டு ராஜமௌலிக்கும், படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ள நிலையில், ரஜினி பாராட்டியது கடவுளே பாராட்டியதுபோல் இருப்பதாக ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் கூறுகையில், “தலைவா, கடவுளே என்னையும் என் குழுவையும் வாழ்த்தியதுபோல் இருக்கிறது. உங்கள் வாழ்த்துக்கள் முன்னாள் எதுவும் பெரிதாக இருக்க முடியாது” என்று புகழ்ந்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg