Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமாவில் களமிறங்கும் தோனி

In சினிமா
Updated: 12:34 GMT, May 1, 2017 | Published: 12:34 GMT, May 1, 2017 |
0 Comments
1325
This post was written by : Shailu

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான மகேந்திர சிங் தோனி தற்போது, சினிமாவில் களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஹிந்தியில் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல ஹொக்கி வீரர் தியான்சந்தின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக பிரபார ஹிந்தி பட இயக்குனர் கரண்ஜோஹர் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து படத்தை தயாரிக்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இதில் ஹொக்கி வீரர் தியான் சந்த் வேடத்தில் வருண் தவான் நடிக்க இருக்கிறார்.

ரோஹித் வைத் இயக்கும் இப்படத்தின் உரிமையை தற்போது தோனி வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதை அடுத்து, அவருடன் கரண் ஜோஹரும் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg