Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குளத்தில் மூழ்கி மாணவன் மரணம்: ஏறாவூரில் சம்பவம்

In இலங்கை
Updated: 05:30 GMT, May 2, 2017 | Published: 05:30 GMT, May 2, 2017 |
0 Comments
1325
This post was written by : Surenth

மட்டக்களப்பு – ஏறாவூர் அல்முனீறா மகளிர் பாடசாலை வீதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அலிகார் தேசியக் கல்லூரியில் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த செய்னுலாப்தீன் முஸ்தாக் அஹமட் என்ற மாணவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவனும் அவரது நண்பர்களும் சேர்ந்து மே தின விடுமுறையை கொண்டாடுவதற்கு அம்பாறை தமன பகுதிக்கு நேற்று (திங்கட்கிழமை) சென்றுள்ளனர். இதனையடுத்து, அங்கு உள்ள வாங்காமம் மலையடிக் குளத்திற்குச் சென்று நீராடியுள்ளனர்.

இதன்போதே குறித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர், அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

குளத்தில் நீராடிய மாணவர்கள் எவருக்கும் முறையான நீச்சல் தெரிந்திருக்கவில்லை என்று, ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக  குறிப்பிட்டுள்ள தமன பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg