Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பண விநியோகத்தை தடுக்க தேர்தல் முறையில் மாற்றம் தேவை: நல்லகண்ணு

In இந்தியா
Updated: 05:53 GMT, May 2, 2017 | Published: 05:18 GMT, May 2, 2017 |
0 Comments
1177
This post was written by : Shailu

தேர்லுக்கான பண விநியோகத்தை நிறுத்த வேண்டுமானால், தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக அடிப்படை பிரச்சினையான குடிநீர் பிரச்சினையைக்கூட தீர்க்க முடியவில்லை.

தற்போதைய சூழ்நிலையில் ஆளும் கட்சியில் உள்ளவர்கள், அவர்களுடைய பிரச்சினைகளையே தீர்க்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறார்கள். எனவே மக்களுடைய பிரச்சினையை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

அந்தவகையில் நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று ஏற்கனவே சட்டம் இருந்தாலும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்படுகின்றது.

எனவே இதனை தடுப்பதற்கு தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே சிறந்த தீர்வாக அமையும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg