Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வர சி.பி.ஐ. லண்டன் பயணம்

In இந்தியா
Updated: 10:23 GMT, May 2, 2017 | Published: 10:23 GMT, May 2, 2017 |
0 Comments
1271
This post was written by : Shailu

லண்டனில் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுதலையான தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சியை மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ)  தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

இதற்காக மத்திய புலனாய்வு துறையின் கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான குழு லண்டன் சென்றுள்ளதோடு,  அவர்களுடன் அமுலாக்கப் பிரிவு அதிகாரிகளும் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் பிரித்தானிய அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகின்ற நிலையில், விரைவில் விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவார் என கூறப்படுகின்றது.

பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றிருந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் அடைந்தார்.

அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்திய அரசு, அவரை நாடு கடத்தும்படி பிரித்தானிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து, அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தது.

அதன் அடிப்படையில் விஜய் மல்லையா கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி லண்டன் ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதோடு, அன்றைய தினமே நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பித்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg