Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூர்யாவிற்கான கதையை தயார் செய்யும் பா.ரஞ்சித்

In சினிமா
Updated: 12:50 GMT, May 2, 2017 | Published: 12:20 GMT, May 2, 2017 |
0 Comments
1326
This post was written by : Shailu

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’ படத்தை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது, தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். அந்தவகையில், அவர் சூர்யாவை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் ரஜினிகாந்தை வைத்து பா.ரஞ்சித் படம் இயற்ற உள்ளதாகவும், இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அந்தவகையில் சூப்பர் ஸ்டாருடனான படத்திற்கு பின்னர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கான கதைக் கூட தயாராகிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதும், இன்னும் பா.ரஞ்சித் மற்றும் சூர்யா கூட்டணி தொடர்பில் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்பட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg