Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள் குறித்து கருண் நாயர் பெருமிதம்

In கிாிக்கட்
Updated: 10:05 GMT, May 3, 2017 | Published: 09:11 GMT, May 3, 2017 |
0 Comments
1129
This post was written by : Anojkiyan

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அச்சம் இல்லாமல் எதிர்கொண்டு தங்களது இளம் வீரர்கள் வெற்றிபெற்றுவிட்டதாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவர் கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய (செவ்வாய்க்கிழமை) போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இப்போட்டியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“டெல்லி அணி இளம் வீரர்களை கொண்டது. அவர்கள் அச்சம் இல்லாமல் விளையாடி போட்டியை வெற்றி பெற செய்தனர். இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

பந்துவீச்சாளர்கள் மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள். தொடக்கத்தில் விக்கெட் விழுந்ததால் சிறிது ஏமாற்றம் அடைந்தேன். முதல் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg