Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிறக்கவுள்ள குழந்தை குறித்து அறிய ஆவலாக இருக்கின்றேன்: செரீனா

In டெனிஸ்
Updated: 11:46 GMT, May 4, 2017 | Published: 07:15 GMT, May 4, 2017 |
0 Comments
1834
This post was written by : Anojkiyan

அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்பதை அறிய ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போது, நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நானும், அலெக்சிஸூம் என் வயிற்றில் உள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தெரிந்து கொள்ள அவசரபடவில்லை. எங்களுக்கு அது இன்ப அதிர்ச்சி ஆக இருக்க வேண்டும் என்பதால் அது பற்றி தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம். மேலும், நான் கருவுற்றுள்ளது எனக்கும், அலெக்சிஸ்க்கும் மிக மகிழ்ச்சியான உணர்வுகளை கொடுத்துள்ளது.

மேலும், இரு வாரங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவேற்றியது தவறுதலாக நடந்த விடயம்” என கூறியுள்ளார்.

முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸுக்கும் அலெக்சிஸ் ஒனினியன் என்ற தொழிலதிபருக்கும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg