Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவின் பாதுகாப்பு மீண்டும் குறைப்பு?

In இலங்கை
Updated: 07:27 GMT, May 4, 2017 | Published: 07:25 GMT, May 4, 2017 |
0 Comments
1339
This post was written by : Varshini

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் 42 பேர் மீள அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்றைய தினம் (புதன்கிழமை) இவர்கள் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவிற்கு மீள அழைக்கப்பட்டுள்ளதாக மஹிந்தவின் பிரத்தியேக செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பதிலீட்டு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் பொலிஸ் தலைமையகத்திலிருந்து அவ்வாறான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லையென தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி, அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவினால் உள்ளக ரீதியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மஹிந்தவின் பாதுகாப்பிற்கு அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினர் கடந்த வருடம் மீளப் பெறப்பட்டு, அவர்களுக்கு பதிலாக பொலிஸார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg