Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எடின்பேர்க் கோமகனுக்கு தெரேசா மே வாழ்த்து

In
Published: 08:33 GMT, May 5, 2017 |
0 Comments
1276
This post was written by : Elakkiya

அரச கடமைகளிலிருந்து ஓய்வுபெறும் எடின்பேர்க் கோமகன்  பிலிப்பிற்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கொலா ஸ்ரேர்ஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆறு தசாப்த காலத்திற்கும் மேலான தனது பொதுவாழ்க்கையை நிறைவு செய்யும் வகையில், பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் எடின்பேர்க் பிரபுவுமாகிய பிலிப் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் அரச கடமைகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபுவின் உயர்வுகளுக்கு பாராட்டுக்களையும் அவருடைய சேவைகளுக்கு நன்றிகளையும் முழுநாடு சார்பாக தெரேசா மே தெரிவித்துள்ளார்.

அதேவேளை ‘ பிரபு பிலிப் தனது வாழ்நாளை பொதுச்சேவைக்காகவும் மகாராணிக்கு ஆதரவாகவும் அர்ப்பணித்தார். அதிகளவான தொண்டுப்பணிகளை செய்துள்ளார். குறிப்பாக ஸ்கொட்லாந்தில் எடின்பேர்க் விருதுகள் இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உதவியிருக்கின்றது. அவருடைய அனைத்து பணிகளையும் மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஒரு அமைதியான மற்றும் மகிழ்ச்சியான ஓய்வு கிடைக்க அவரை வாழ்த்துகின்றேன்’ என்று ஸ்கொட்லாந்து முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg