Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கியில் மீண்டும் மரண தண்டனை?

In உலகம்
Updated: 11:33 GMT, May 6, 2017 | Published: 11:33 GMT, May 6, 2017 |
0 Comments
1598
This post was written by : Sylviya

துருக்கியில் மரண தண்டனை அமுலுக்கு கொண்டுவருவது குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுமேயானால், ஜேர்மனி வாழ் துருக்கியர்கள் அதில் பங்கேற்று வாக்களிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது என ஜேர்மனிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவது குறித்து கடந்த மாதம் துருக்கியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் எர்டோகன் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இடம்பிடிப்பது தொடர்பில் அக்கறை செலுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

அதே சமயம், மரண தண்டனை வழங்கப்படுவது துருக்கியில் மீண்டும் சட்டமாக்கப்பட வேண்டும் எனவும் எர்டோகன் முன்னதாக தெரிவித்திருந்தார். இருப்பினும், பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

அத்துடன், துருக்கியில் மரண தண்டனை சட்டமாக்கப்படுமேயானால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புறுமை பெறும் சந்தர்ப்பத்தை துருக்கி இழக்கும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், மரண தண்டனை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்படுவது குறித்து ஜேர்மனியில் உள்ள துருக்கியர்களுக்கு வாக்களிக்க ஒருபோதும் இடமளிக்கப்படாது என அதிபர் அங்கேலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg