Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்செஸ்டர் மீள்சுழற்சி ஆலையில் திடீர் தீ

In
Updated: 08:44 GMT, May 7, 2017 | Published: 08:40 GMT, May 7, 2017 |
0 Comments
1284
This post was written by : Sylviya

இங்கிலாந்து மன்செஸ்டர் பகுதியில் மீள்சுழற்சி ஆலையொன்றில் திடீரென பரவிய தீ, கட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ, வாட்லி தொழிற்பேட்டையில் (Wardley industrial estate) நேற்று (சனிக்கிழமை) இரவிலேயே பரவ ஆரம்பித்ததாகவும், அந்த தீயை கட்டுக்கு கொண்டுவரும் பொருட்டு சுமார் எட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் தீயில், குறித்த மீள்சுழற்சி ஆலையில் இருந்த பெருமளவான கணிணி உதிரிப்பாகங்கள் முற்றாக சேதமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பலர் பாதுகாப்பு நோக்கம் கருதி வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் எவரும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த திடீர் தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg