Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆயிரம் கோடி ரூபாவையும் தாண்டி சாதனை படைக்கும் ‘பாகுபலி-2’

In சினிமா
Updated: 08:55 GMT, May 7, 2017 | Published: 08:55 GMT, May 7, 2017 |
0 Comments
1173
This post was written by : Vithushagan

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பாகுபலி-2’ திரைப்படம் 1000 கோடி ரூபாவை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கின்றன. இதனால், இந்த படத்தின் வருமானத்திலும் இந்திய சினிமாவில் யாரும் நிகழ்த்த முடியாத  சாதனையை பெற்றுள்ளது.

படம் வெளியான 6 நாட்களிலேயே 800 கோடி ரூபாவை  வசூலித்து இந்திய சினிமாவிலேயே அதிகமான வசூலை பெற்ற படம் என்ற சாதனையை பெற்றது.

இதைத் தொடர்ந்து இந்த படம் விரைவில் 1000 கோடி ரூபாவை எட்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த சாதனையையும் தற்போது பாகுபலி-2 நிகழ்த்தியுள்ளது. 9 நாட்களில் இந்த படம் 1000 கோடி ரூபாவை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவிலேயே 1000 கோடி ரூபாவை எட்டிய முதல் படம் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg