Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனைத்து குண்டுகளின் தாய் என வர்ணிக்கப்பட்டமைக்கு போப் பிரான்சிஸ் அதிருப்தி

In ஐரோப்பா
Published: 10:30 GMT, May 7, 2017 |
0 Comments
1235
This post was written by : Anojkiyan

ஆப்கானிஸ்தானை பதம் பார்த்த அமெரிக்காவின் அனைத்து குண்டுகளின் தாய் என வர்ணிக்கப்பட்ட இராட்சத குண்டுக்கு ‘அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய்’ என பெயரிட்டமை குறித்து பாப்பரசர் போப் பிரான்சிஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

வத்திகானில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய்’ என்ற பெயரை கேட்ட போது நான் இழிவானதாக உணர்ந்தேன். ஒரு தாய் உயிர் மட்டுமே கொடுப்பார். ஆனால், இது மரணத்தை மட்டுமே கொடுக்கிறது. இந்த கருவியை தாய் என்று அழைக்கிறோம்’ என கூறினார்.

கடந்த மாதம், ஆப்கானிஸ்தான் நங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் சுரங்கங்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் விமானம் ஒன்றின் மூலம் சுமார் 9,800 கிலோ எடை கொண்ட ‘அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய்’ என வர்ணிக்கப்படும் இராட்சத குண்டை வீசியது. இதில் 36 தீவிரவாதிகள் உயிரிழந்ததோடு ஐ.எஸ் தீவிரவாதிகளின் சுரங்கங்களும் தரைமட்டமாக்கப்பட்டன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg