Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவின் கிழக்கு நகரில் இடம்பெற்ற கார் விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 10:02 GMT, May 8, 2017 | Published: 10:02 GMT, May 8, 2017 |
0 Comments
1298
This post was written by : Shailu

இந்தியாவின் கிழக்கு நகரான கிரிடிஹில் (Giridih)  இடம்பெற்ற கார் விபத்தில் மூத்த பொலிஸ் அதிகாரி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்தில் மேலும் 2பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், இவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுபூர் நகரத்திலிருந்து கிரிடிஹில் நகரத்திற்கு பயணித்த காரானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மரம் ஒன்றில் மோதியதையடுத்து, இவ்விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள்   தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg