Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமரின் இலங்கை விஜயத்தில் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: வாசன்

In இந்தியா
Updated: 17:28 GMT, May 9, 2017 | Published: 10:11 GMT, May 9, 2017 |
0 Comments
1402
This post was written by : Shailu

இலங்கை பயணத்தின் போது தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய நிலையில், மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ஜி.கே.வாசன் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உடன்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை வார்த்தை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் இலங்கை பிரதமருடனான சந்திப்பின் போது இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏற்கனவே இந்திய- இலங்கை மீனவப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பலதடைவைகள் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தாலும் இன்னும் சுமூகத்தீர்வு எட்டப்படாமல் தமிழக மீனவர் பிரச்சினைகளின் நீடித்துக் கொண்டே செல்கின்றது.

தமிழக மீனவர்களின் பாரம்பரியமான கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இலங்கையின் வசம் உள்ள தமிழக மீனவர்களின் 136 படகுகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதோடு, சேதமடைந்த படகுகளுக்கு உரிய நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்.

அத்தோடு பிரதமரின் இலங்கைப் பயணம் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணும் வகையில் அமைய வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg