Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சுதாகரனுக்கு பிடியாணை!

In இந்தியா
Updated: 10:26 GMT, May 10, 2017 | Published: 08:49 GMT, May 10, 2017 |
0 Comments
1378
This post was written by : Shailu

அந்நிய செலாவணி மோசடி வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுதாகரன் மீதான அந்திய செலாவணி மோசடி வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சுதாகரனுக்கு பிடியாணை பிறப்பித்த நீதிபதி, எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி அவரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.

1997-98ஆம் ஆண்டுகளில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக டி.டி.வி.தினகரன், சசிகலா மற்றும் சுதாகரன் உள்ளிட்டவர்கள் மீது அமுலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

எனினும் மற்றுமொரு வழக்கான சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியிருந்த சுதாகரனுக்கு விதிக்கப்பட்டிருந்த 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து அவர் தற்போது சசிகலா, இளவரசி ஆகியோருடன் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg