Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவதானிக்க இந்திய உயர்ஸ்தானிகர் மலையகம் விஜயம்

In இலங்கை
Updated: 10:11 GMT, May 10, 2017 | Published: 09:02 GMT, May 10, 2017 |
0 Comments
1575
This post was written by : Risha

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயத்தை முன்னிட்டு, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இந்திய உயர்ஸ்தானிகர் ரஞ்சித் சிங் சந்து மற்றும் இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஆகியோர் ஹற்றனிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்திய அரசின் நிதியுதவியில் நவீன வசதிகளுடன் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதற்காக, பாரத பிரதமர் மோடி நாளை மறுதினம் மலையகத்திற்குச் செல்லவுள்ளார்.

இந்நிலையில், இன்று மலையகத்திற்கு சென்ற அதிகாரிகள் பிரதமருக்கான வரவேற்பு ஏற்பாடுகள் மற்றும் கிளங்கன் வைத்தியசாலை, பொதுமக்களை சந்திக்கவுள்ள நோர்வூட் விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவதானித்துள்ளனர்.

ind1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg