Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோசடிமிக்க பொருத்து வீட்டுத்திட்டத்தினை அனுமதிக்க மாட்டோம்: சுமந்திரன்

In இலங்கை
Updated: 05:46 GMT, May 11, 2017 | Published: 05:37 GMT, May 11, 2017 |
0 Comments
1735
This post was written by : Risha

மோசடிகள் நிறைந்த பொருத்து வீட்டு திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

65 ஆயிரம் பொருத்து வீட்டு திட்டத்தின் முதற்கட்டமாக வட. மாகாணத்தில் 6 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் வீட்டுத் தேவைக்கான அவசியத்தை சாதகமாகக் கொண்டு மோசடிகள் நிறைந்த இந்த திட்டத்தை முன்னெடுக்க அனுமதிக்க மாட்டோம்.

மீள்குடியேற்றத்திற்காக ஒரு இலட்சத்து முப்பதாயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன. இந்த பொருத்து வீடுகளை அமைக்கும் செலவில் இரண்டு கல் வீடுகளை அமைத்து விடலாம்.

பொருத்து வீடுகளை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினாலும், இத்திட்டத்தை மக்கள் விரும்பாத நிலையில் அதனை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg