Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லிபிய கடலோர காவல் படையினரால் 350 குடியேற்றவாசிகள் மீட்பு

In ஐரோப்பா
Updated: 10:28 GMT, May 11, 2017 | Published: 10:28 GMT, May 11, 2017 |
0 Comments
1365
This post was written by : Elakkiya

சட்டவிரோத பயணத்தினை மேற்கொண்ட சுமார் 350 குடியேற்றவாசிகள் லிபிய கடலோர காவல் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு திரிபோலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பாதுகாப்பாக மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள் துனீசியா, மொராக்கோ, சிரியா, எகிப்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சப்ரதா நகரின் வடக்கே சுமார் 17 மைல் தொலைவில் இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்வழியாக ஐரோப்பாவை  அடைய நினைக்கும் குடியேற்றவாசிகளுக்கு லிபியா முக்கிய பகுதியாக உள்ளது. வடக்கு ஆபிரிக்காவில் இருந்து இத்தாலிக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை இவ்வருட ஆரம்பத்திலிருந்து 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, கடந்த வருடம் இத்தாலியை சென்றடைந்த குடியேற்றவாசிகளின் மொத்த எண்ணிக்கை 181,000 என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg