Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி விசேட இராப்போசன விருந்து (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 17:10 GMT, May 11, 2017 | Published: 16:17 GMT, May 11, 2017 |
0 Comments
1767
This post was written by : Vithushagan

 சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால்  விசேட இராப்போசன விருந்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமரை ஜனாதிபதி வரவேற்றார். பிரதமர் ரனில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

1 03-2-1024x397

கங்காராம விகாரையில் வழிபட்டார் இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பிலுள்ள கங்காராம விகாரைக்குச் சென்று இன்று (வியாழக்கிழமை) மாலை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

அங்கு கங்காராம விகாராதிபதி உள்ளிட்டோர் அவரை வரவேற்றுள்ளனர்.  அதன்பின்னர் அங்கு இடம்பெற்ற வழிபாட்டு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

இந்திய பிரதமர் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கங்காராம பகுதியில் வெசாக்  தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வெசாக் வலயத்தை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைத்துள்ளார்.

விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் ஈடுபட்டு அங்கு கூடியிருந்த வெவ்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த மதத்தலைவர்களையும் அவர் சந்தித்துள்ளார்.

இந்த நிகழ்வில் சபாநாயகர் கருஜயசூரிய , அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, சாகல ரத்னாயக்க. விஜயதாச ராஜபக்ஷ, ரி.எம்.சுவாமிநாதன், தயா கமகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

unnamed (42)
unnamed (44) unnamed (45)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg