Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ்: இறுதிகட்ட பணிகள் அடுத்தவாரம்

In இலங்கை
Updated: 04:55 GMT, May 12, 2017 | Published: 04:54 GMT, May 12, 2017 |
0 Comments
1353
This post was written by : Risha

சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த சட்டங்களை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள நிலையில், இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான இறுதிகட்ட பணிகள் அடுத்தவாரம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் வழங்குவதற்கான அங்கீகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சர்களின் சபை நேற்று (வியாழக்கிழமை) வழங்கியிருந்த நிலையில், அரசாங்கத் தகவல் திணைக்களம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த சட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களை இலங்கை அரசாங்கம் அமுலாக்கி உள்ளதனால் இந்த வரிச்சலுகையைப் பெற இலங்கைக்கு தகுதி உள்ளது என ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், குறித்த வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்கான மூன்று நடைமுறை செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg