Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவின் ‘ஒரே பிராந்தியம் ஒரே பாதை’ பேரவைக்கான ஊடக மையம் திறந்து வைப்பு

In
Updated: 09:27 GMT, May 12, 2017 | Published: 09:27 GMT, May 12, 2017 |
0 Comments
1415
This post was written by : Elakkiya
jikl

சர்வதேச ஒத்துழைப்புக்களுக்கான  ‘ஒரே பிராந்தியம் ஒரே பாதை’ (Belt and Road) பேரவையின் ஊடக மையம் சீனாவின் தேசிய மாநாட்டு மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 ஆயிரம் சதுர மீற்றர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த ஊடக மையத்தின் முழுப்பகுதியும் ஜியாபைட்ஸ் வயர்லெஸ் இணைய வசதியுடன் 4000 நிருபர்கள் பணிபுரியவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

அத்துடன் 15 செயற்பாட்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு சேவைக்கான தொழில்சார் உபகரணங்கள், அறிக்கையிடல் மற்றும் ஒலிபரப்பு, ஒளிபரப்பு சேவைகள், ஊடகவியலாளர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலவச உணவு, புத்துணர்ச்சி, சுகாதாரம் மற்றும் பிரார்த்தனை அறைகள் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஊடக சந்திப்புக்கள் நடைபெறும் என்று கூறப்படுகின்றது. அதற்கேற்ப வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்தும் ஊடக மையம் சேவையிலிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg