Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பத்து மில்லியன் டொலர்கள் மோசடியுடன் தொடர்புடைய இருவர் கைது

In கனடா
Updated: 11:12 GMT, May 13, 2017 | Published: 11:11 GMT, May 13, 2017 |
0 Comments
1139
This post was written by : Elakkiya
theft3-600x518

கனடா மற்றும் வெளிநாடுகளில் இடம்பெற்ற பத்து மில்லியன் டொலர்கள் மோசடியுடன் தொடர்புடைய கும்பல் ஒன்றை ரொறன்ரோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

ரொறன்ரோ பொலிஸார், மாகாண அமைச்சுக்கள் மற்றும் அமெரிக்க முகவர் அமைப்புக்கள் இணைந்து நடத்திய ‘ரோயல் திட்டம்’ என்ற திட்டத்தின் மூலமே மேற்படி கும்பலை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆடம்பர கடிகாரங்கள், நகைகள் மற்றும் 90 சோடி காலணிகள் என சுமார் 3 லட்சம் டொலர் பெறுமதியான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரொறொன்ரோவை சேர்ந்த 45 வயதான அடிடாயோ ஒகுன்டானா என்ற நபர் மீது பல மோசடி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேவேளை 37 வயதுடைய அடெகுநெல் ஜோன்ஸன்; என்பவர் மீது மோசடி மற்றும் அடையாள திருட்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

44 வயதுடைய டுரோ அகின்ரோலா மற்றும் 47 வயதுடைய ரொறன்ரோவை சேர்ந்த இமானுவேல் சலாகோ இருவருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த கீ சாக் என்பவர் தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg