Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட.மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் மஹிந்தவுடன் இரகசியச் சந்திப்பு!

In இலங்கை
Updated: 15:12 GMT, May 13, 2017 | Published: 15:12 GMT, May 13, 2017 |
0 Comments
1642
This post was written by : Ravivarman

வட.மத்திய மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் சிலர் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதுடன், இச்சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கும் 17 பேர் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது வட.மத்திய மாகாணத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உகந்த நேரம் இதுவல்ல எனவும், பொறுமையுடன் செயற்பட வேண்டும் எனவும், வட.மத்திய மாகாண சபையின் உறுப்பினர்களுக்கு மஹிந்த அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வட.மத்திய மாகாண சபையில் மொத்தம் 33 உறுப்பினர்களுள் 18 பேர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அம்மாகாண சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg