Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவையும் தினகரனையும் ஒதுக்கிவிட்டு அ.தி.மு.க-வால் செயற்பட முடியாது: நாஞ்சில் சம்பத்

In இந்தியா
Updated: 04:44 GMT, May 14, 2017 | Published: 04:18 GMT, May 14, 2017 |
0 Comments
1393
This post was written by : Shailu

சசிகலாவையும் தினகரனையும் ஒதுக்கி வைத்துவிட்டு அ.தி.மு.க-வால் செயற்பட முடியாது என அ.தி.மு.க. அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

தேவகோட்டை அண்ணா அரங்கில் அ.தி.மு.க அம்மா அணி சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலானர் தினகரன் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து  நேற்று (சனிக்கிழமை) பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உன்னதமான தலைவன் கிடைத்து விட்டதாக நாங்கள் மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால், பொய் வழக்கு தாக்கல் செய்து தினகரனை கைதுசெய்துவிட்டனர்.

ஜெயலலிதா இறந்து 75 நாட்களாக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தன்னுடைய பதவி பறிபோனவுடன், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் நீதி விசாரணை தேவை எனக் கூறி வருகிறார்.

எனவே மிக விரைவில் தினகரன் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் வெளியே வருவார்கள். தினகரன் அரசாட்சி செய்வார் என்ற நம்பிக்கையுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg