Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பௌத்த நாடுகளுக்கு தலைமைத்துவம் வழங்க இலங்கை தயார்! – ஜனாதிபதி

In இலங்கை
Updated: 07:19 GMT, May 15, 2017 | Published: 07:06 GMT, May 15, 2017 |
0 Comments
1409
This post was written by : Ravivarman
_YAM3938

கண்டி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அடைவதன் பொருட்டு எதிர்காலத்தில் பௌத்த நாடுகளின் ஒன்றிணைந்த செயற்திட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்க தயாராக இருக்கின்றோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி, தலதா மாளிகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 14வது சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளின் நிறைவு விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பேண்தகு அபிவிருத்தி மற்றும் பேண்தகு சமாதானத்தின் குறிக்கோள்களை அடைவதனூடாக சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். இதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

உலகில் காணப்படும் பிரச்சினைகளுக்கு பௌத்த கோட்பாடுகளின் மூலமாக வழங்கக்கூடிய தீர்வுகளை செயற்படுத்துவதற்காக சர்வதேச ரீதியில் கொண்டுவரப்பட வேண்டிய திட்டங்கள் அடங்கிய பிரேரணையாகிய கண்டி பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg