Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பாக சிவில் அமைப்புகள் இன்று தீர்மானம்!

In இலங்கை
Updated: 09:23 GMT, May 15, 2017 | Published: 09:17 GMT, May 15, 2017 |
0 Comments
1327
This post was written by : Ravivarman

நல்லாட்சி அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பது தொடர்பாக சிவில் அமைப்புகள் இன்று (திங்கட்கிழமை) தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டையில் அமைந்துள்ள சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள இத் தீர்மானக் கூட்டத்தில் 49 இற்கு மேற்பட்ட  சிவில் அமைப்புகள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக நீதிக்கான தேசிய அமைப்பு உள்ளிட்ட 49 சிவில் அமைப்புகள் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தன.

எனினும் அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட பிரதான வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்துச்செய்தல், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதித்தல், ஊழல் மோசடிகள் இன்றி நாட்டை நிர்வாகம் செய்தல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அமுல்படுத்த அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என மேற்படி அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg