Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போமுலா -1 கார்பந்தய போட்டியில் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம்

In விளையாட்டு
Updated: 11:20 GMT, May 15, 2017 | Published: 11:20 GMT, May 15, 2017 |
0 Comments
1197
This post was written by : Surenth

2017ஆம் ஆண்டுக்கான போமுலா -1 கார்பந்தய போட்டியில் இங்கிலாந்தின் மெர்சிடஸ் அணி வீரர் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி 35 நிமிடங்கள் 56.497 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பெற்றார்.

பார்சிலோனாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற 5ஆவது சுற்று பந்தயமான ஸ்பெயின் கிராண்ட்ஃபிரி போட்டியில் ஜெர்மனியின் பெராரீ அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 3.490 வினாடி பின்தங்கி 2ஆவது இடத்தை கைப்பற்றினார்.

அவுஸ்ரேலிய ரெட்புல் அணியின் வீரர் டேனியல் ரிச்சார்டே 3ஆவது இடத்தையும் மெக்சிகோ அணியின் செர்ஜியோ பெரேஸ் 4ஆவது இடத்தையும், பிரான்ஸ் அணியின் ஈஸ்ட்பான் ஒகான் 5ஆவது இடத்தையும் கைப்பற்றினர்.

இதன்படி, 5ஆவது சுற்று நிறைவில் செபஸ்டியன் வெட்டல் 104 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹொமில்டன் 98 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், வோல்டெரி போட்டாஸ் 63 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg