Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

In வணிகம்
Updated: 07:04 GMT, May 16, 2017 | Published: 07:04 GMT, May 16, 2017 |
0 Comments
1179
This post was written by : Elakkiya

உலக கச்சா எண்ணெய் சந்தையில் சமநிலையை ஏற்படுத்தும் நோக்கில் எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் ஒப்பந்தம் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கப்பட வேண்டும் என சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் எண்ணெய் விலைகள் 3 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

சீனாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மேற்குறித்த இருநாட்டு எரிசக்தி அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பை தொடர்ந்து, கச்சா (Brent Crude)  எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 52.52 டொலர்களுக்கு அதிகரித்துதள்ளது.

சவுதி அரேபியாவில் ஆதிக்கம் செலுத்தும் பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC)  எண்ணெய் விலைகளை அதிகரிப்பதற்காக வெளியீட்டு குறைப்பை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது.

பிரென்ட் மற்றும் யு.எஸ் கச்சா எண்ணெய் விலைகள் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவில் நேற்று திங்கட்கிழமை 52.17 டொலராகவும் 49.23 டொலராகவும் இருந்தது.

பீஜிங்கில் நேற்று இடம்பெ;ற சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவித்த சவுதி எரிசக்தி அமைச்சர் காலிட் அல் – ஃபலீஹ் ;(Khalid al-Falih), ‘கச்சா எண்ணெய் தொடர்பில் நடைமுறையில் உள்ள குறைப்புக்கள் போலவே அடுத்தகட்ட குறைப்புக்களும் அமையும்’ என குறிப்பிட்டிருந்தார்.

குறித்த அறிவித்தலை தொடர்ந்து ஆசிய வர்த்தகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பை காட்டியுள்ளது.
சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் நாள் ஒன்றுக்கு 200மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg