Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணிக்கெதிரான தொடரில் விளையாட தயாராகும் ராகுல்

In கிாிக்கட்
Updated: 09:16 GMT, May 17, 2017 | Published: 08:04 GMT, May 17, 2017 |
0 Comments
1531
This post was written by : Anojkiyan

தோள்பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட இந்திய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல், இலங்கை அணிக்கெதிரான தொடரில் விளையாடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த லோகேஷ் ராகுல், தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதனால் அவர் நடப்பு ஐ.பி.எல் தொடர், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணம் ஆகியவற்றை தவறவிட்டார். இந்நிலையில் அவர் மூன்று மாத கால ஓய்வின் பின் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கெதிரான தொடரில் விளையாட முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “தோள்பட்டை காயத்திற்காக நான் சிகிச்சை செய்து ஒரு மாதம் ஆகிறது. காயம் குணமடைய இன்னும் நாட்கள் தேவைப்படுகிறது. காயம் முழுவதும் குணமடைந்து, பயிற்சியில் ஈடுபட்டு அணிக்கு திரும்புவதற்கு இன்னும் சுமார் இரண்டு மாத காலம் ஆகலாம். இதனால் ஓகஸ்ட் மாதம் இந்திய அணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளேன். அநேகமாக இலங்கை தொடருக்கு என்னால் திரும்ப இயலும்.

காயம் ஏற்பட்டு வீட்டில் இருக்கும் நேரத்தில் உடல் ரீதியான சவால் மட்டுமல்ல. மனதளவிலும், உணர்வு அளவிலும் மிகப்பெரிய சவாலானது. எதுவுமே செய்யாமல் வீட்டில் இருப்பது வெறுப்பாக இருக்கிறது.  விளையாட்டின்போது காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் போவது வீரர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம்தான். நான் இந்தியாவின் மிகப்பெரிய தொடரான ஐ.பி.எல்., ஐ.சி.சி.யின் சம்பியன் கிண்ணம் ஆகிய தொடர்களை தவற விட்டுள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான தொடரான சம்பியன்ஸ் கிண்ண தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். தற்போது விளையாட முடியாமல் போனது சற்று ஏமாற்றம்தான். எனவே, நான் என்னுடைய உடல்நலத்தில் அக்கறை எடுத்து, வலுவாக இந்திய அணிக்கு திரும்புவேன்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg