Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல் நிறுவனத்தின் கேமிங் லப்டொப்கள் அறிமுகம்

In தொழில்நுட்பம்
Updated: 11:44 GMT, May 17, 2017 | Published: 11:43 GMT, May 17, 2017 |
0 Comments
1267
This post was written by : Elakkiya

டெல் நிறுவனத்தின் கேமிங் கணினி மற்றும் லப்டொப் சாதனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏலியன்வேர் 15 (Alienware), ஏலியன்வேர் 17 (Alienware) லப்டொப் மற்றும் ஏலியன்வேர் ஒளரா (Alienware Aurora) டெஸ்க்டொப், இன்ஸ்பிரோன்(Inspiron) 15 5000 கேமிங், இன்ஸ்பிரோன்  15 7000 கேமிங் என இரண்டு டெஸ்க்டொப் மற்றும் இரண்டு லப்டொப்கள் வெளியாகியுள்ளன.

ஏலியன்வேர் 15 சிறப்பம்சங்களாக விண்டோஸ் 10 64-பிட் இயங்குதளம், 15.6 இன்ச் 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் (pixels) கொண்ட ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, இன்டெல் கோர் i7-7700HQ processor, இன்டெல் எச்டி கிராஃபிக்ஸ் 530, என்விடியா ஜீஃபோர்ஸ் GTX 1060 , 6ஜிபி GDDR5  வீடியோ மெமரி, 8GB DDR4 2133MHz RAM, 1000 ஜிபி  7,200RPM HDD மற்றும் 68Wh பட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ஏலியன்வேர் டெஸ்க்டாப் சிறப்பம்சங்களாக ஏலியன்வேர் ஒளரா டெஸ்க்டொப்களின் விண்டோஸ் 10 64-பிட் இயங்குதளம், கோர் i7-7700HQ processor , 3.5 ஜிகாஹேர்ட்ஸ் என்விடியா ஜீஃபோர்ஸ் GTX 1060, 4ஜிபி 6GB GDDR5 வீடியோ மெமரி, 8ஜிபி DDR4 2400MHz RAM மற்றும் 1000 ஜிபி  7,200 RPM ஹார்ட் டிரைவ் வழங்கப்பட்டுள்ளது.

டெல் இன்ஸ்பிரான் 15 5000 கேமிங் மொடலில் விண்டோஸ் 10 64-பிட் இயங்குதளம், 15.6 இன்ச் ஃபுல் எச்டி 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட தொடுதிரை, இன்டெல் மற்றும் ஏ.எம்.டி. புரொசெஸர்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வசதி, என்விடியா ஜீஃபோர்ஸ் GTX 1050, 4ஜிபி GDDR5  வீடியோ மெமரி, 32ஜிபி DDR4  2400MHz RAM, 512 ஜிபி ஹார்ட் டிரைவ் மற்றும் 74Whr 6-செல் பட்டரி வழங்கப்பட்டுள்ளது.

டெல் இன்ஸ்பிரான் 15 7000 கேமிங் மொடலில் விண்டோஸ் 10 64-பிட் இயங்குதளம், 15.6 inch full-HD  1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, இன்டெல் கோர் i5-7300HQ புரொசெஸர், என்விடியா ஜீஃபோர்ஸ் GTX 1050, 4ஜிபி GDDR5  வீடியோ மெமரி, 8GB DDR4 2400MHz RAM, 1000 ஜிபி 5,400RPM  ஹார்டு டிரைவ், 8GB cache மற்றும் 74Whr 6-செல் பட்டரி வழங்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg