Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுவரெலியாவில் 30 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து: 16 பேர் படுகாயம்

In இலங்கை
Updated: 17:28 GMT, May 18, 2017 | Published: 17:27 GMT, May 18, 2017 |
0 Comments
1212
This post was written by : Vithushagan

நுவரெலியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பேருந்து இன்று(வியாழக்கிழமை) நுவரெலியா வெலிமடை பிரதான வீதியில் கட்டுமான பகுதியில் பிரதான வீதியிலிருந்து விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட 16 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

unnamed (28) unnamed (29)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg