Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல். மூலம் ஸ்டோக்சின் ஆட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது: வில்லியர்ஸ்

In விளையாட்டு
Updated: 07:01 GMT, May 20, 2017 | Published: 07:01 GMT, May 20, 2017 |
0 Comments
1162
This post was written by : Risha

ஐ.பி.எல். தொடரின் மூலம் இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்சின் ஆட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது என தென்னாபிரிக்க அணியின் தலைவர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு முன்னோட்டமாக தென்னாபிரிக்கா அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே ஸ்டோக்சின் ஆட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த வில்லியர்ஸ், முதன்முறையாக ஐ.பி.எல். தொடரில் கலந்து கொண்டா ஸ்டோக்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

பென் ஸ்டோக்ஸ் தலைசிறந்த வீரர். துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறையிலும் சிறப்பாக செயல்படுகிறார். ஏராளமான வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் தங்களுடைய வழியை தொலைத்துள்ளனர். பலர் அவர்களுடைய ஆட்டம் மூலம் முன்னேற்றகரமான அடுத்த நிலைக்கு சென்றுள்ளனர். அந்தவகையில், பென் ஸ்டோக்சின் ஆட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg