Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணமதிப்பு நீக்கமே நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல்: சிதம்பரம் குற்றச்சாட்டு

In இந்தியா
Updated: 07:05 GMT, May 21, 2017 | Published: 05:54 GMT, May 21, 2017 |
0 Comments
1383
This post was written by : Shailu

பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்கம்தான் இந்தியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நேற்று (சனிக்கிழமை) மாலை காங்கிரஸ் கட்சியின் சார்பில் இடம்பெற்ற இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சிதம்பரம் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

குறித் கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றிய போது, “இந்தியாவில் ஜனநாயக முறைப்படி பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. அதன் தலைமை பொறுப்பை நரேந்திர மோடி ஏற்றுள்ளார். நான் இதனை மறுக்கவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் பிரதமர் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அந்தவைகையில் தமிழகத்தில் மட்டும் பாரதிய ஜனதா கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு தமிழக மக்கள் அறிவுப்பூர்வமாக செயற்பட்டதே காரணம்.

இந்நிலையில், திடீரென ஒரு நாள் ரூ.500 மற்றும் ரூ.1000 பணத்தாள்கள் செல்லுப்படியற்றவையாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால் கறுப்பு பணம், ஊழல் மற்றும் போலி பணத்தாள்கள் ஒழிக்கப்படும் என்று கூறினார். ஆனால் குறித்த அறிவிப்பால் ஏழை மக்கள் மட்டுமே பெரிதும் பாதிக்கப்பட்டனர்

வருமான வரி சோதனையில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எனினும் இம்மூன்று ஆண்டுகளில் ஊழல் ஒழியவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg