Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கந்தப்பளையில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Updated: 09:47 GMT, May 21, 2017 | Published: 09:47 GMT, May 21, 2017 |
0 Comments
1263
This post was written by : Ravivarman

கந்தப்பளை தேயிலை மலை தோட்டத்தில் அண்மையில் 16 வயதான சிறுமியொருவரை நால்வர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கந்தப்பளை நகரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மலையக ஆய்வாளர் அமைப்புடன் இணைந்து மீனாட்சி பெண்கள் பாதுகாப்பு அமைப்பு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) இக் கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்ட போதிலும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி சுமார் 300ற்கு மேற்பட்டவர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதில், ‘சட்டவிரோத சாராய தவறணைகளை மூடு’, ‘மது அருந்தும் காமுகனிடமிருந்து எமது பிள்ளைகளைக் காப்பாற்று’, ‘மலையக மக்களை போதைக்கு அடிமையாக்காதே’, ‘வல்லுறவில் ஈடுப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கு’ என்ற வாசகங்களைத் தாங்கிய பதாதைகளை போராட்டக்கார்கள் தாங்கியிருந்தனர்.

கந்தப்பளை பொலிஸார் போராட்டத்தை முன்னெடுக்கத் தடைசெய்த போதும் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC03809 DSC03811

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg