Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரத்த தானம் செய்யுமாறு கோரும் கனேடிய இரத்த சேவைகள் மையம்

In கனடா
Updated: 08:55 GMT, May 22, 2017 | Published: 13:04 GMT, May 21, 2017 |
0 Comments
1291
This post was written by : Surenth

கனடாவில் ஏற்பட்டுள்ள இரத்த பிரச்சினையை குறைக்க ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இரத்த நன்கொடையாளர்களிடம் இருந்து இரத்த தானத்தை எதிர்பார்ப்பதாக இரத்த சேவைகள் மையம் அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த வருடம் யூலை மாதம் முதலாம் திகதிக்குள் குறிப்பிட்ட அளவு இரத்தம் தேவைப்படுவதாக அந்த மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

நன்கொடையாளர்களால் ஒரு மணி நேரத்தை செலவிட்டு வழங்கப்படும் இரத்தம் நோயாளி ஒருவருக்கு மூன்று தொடக்கம் ஐந்து நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா மக்கள் தொகையில், 50 வீதமானவர்கள் மாத்திரம் இரத்தம் வழங்குவதற்கு தகுதியானவர்களாக இருக்கின்ற போதிலும், அதிலும் நான்கு வீதமானவர்கள் மாத்திரமே இரத்த தானம் செய்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, ‘ஓ’ இரத்தம் அதிகம் தேவைப்படுகின்ற காரணத்தால் நன்கொடையாளர்கள் உடனடியாக நியமன திகதியை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg