Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சரவையில் யாருமே எதிர்பார்க்காத மாற்றம் இன்று: மஹிந்த

In இலங்கை
Updated: 01:55 GMT, May 22, 2017 | Published: 01:55 GMT, May 22, 2017 |
0 Comments
1332
This post was written by : Ravivarman

“அமைச்சரவையில் இடம்பெறவுள்ள மாற்றமானது எவருமே எதிர்பார்த்திருக்க முடியாதவாறு அமையவிருக்கின்றது” என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்பேதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லாட்சி அரசின் எதிர்கால நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு மேற்படி தீர்மானங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சர்களுக்கும் பல முக்கிய தீர்மானங்கள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

அமைச்சரவை மாற்றம் குறித்து பலவாறான கருத்துக்களைக் கொண்டிருந்த அனைவருக்கும் இன்று சிறந்த பதில் கிடைக்குமென்பதுடன், அரசாங்கத்தினைத் தொடர்ந்தும் விமர்சித்து வருபவர்களுக்கு இதன்மூலம் தகுந்த பதிலடி கிடைக்கும்” என மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg