Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரணாப் முகர்ஜியின் காஞ்சிபுர விஜயம் இரத்து: நாளை ஊட்டி செல்கிறார்

In இந்தியா
Updated: 07:19 GMT, May 22, 2017 | Published: 06:38 GMT, May 22, 2017 |
0 Comments
1336
This post was written by : Surenth

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் முகமாக காஞ்சிபுரத்திற்கு விஜயம் செய்ய இருந்த நிலையில் குறித்த விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தலைவர் ஒருவர் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதால் 24ஆம் திகதி இடம்பெறவிருந்த விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் சங்கரா பல்கலைகழகத்தில் 24ஆம் திகதி நடைபெற இருந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர், வரதராஜபெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிரார்த்தனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

காஞ்சிபுரத்திற்கான  விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் அவர் ஊட்டி செல்லவுள்ளார். அங்கு அவர் தனியார் பாடசாலை ஒன்றில் நடைபெறும் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்காவை பார்வையிடவுள்ளார்.  ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு ஊட்டியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg