Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சர்களின் மாற்றம் மக்களுக்காக அல்ல: அநுரகுமார

In இலங்கை
Published: 02:01 GMT, May 23, 2017 |
0 Comments
1257
This post was written by : Vithushagan

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி அதனூடாக 2020 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை இழுத்துச் செல்வதற்கான நடவடிக்கையே இந்த அமைச்சர்கள் மாற்றத்துக்கான பிரதான நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் நாட்டு மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு நடவடிக்கை அல்லவெனவும், அரசாங்கத்தின் உள்வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg