Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நம்பிக்கையுடன் சாதித்துக் காட்டியுள்ளோம்: ரோஹித் ஷர்மா

In கிாிக்கட்
Updated: 05:25 GMT, May 23, 2017 | Published: 05:23 GMT, May 23, 2017 |
0 Comments
1421
This post was written by : Elakkiya

முடியும் என்று நம்பினோம் சாதித்து காட்டியிருக்கின்றோம் என பத்தாவது ஐ.பி.எல் தொடரில் சம்பியன் கிண்ணத்தை தட்டிச்சென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் பரபரப்பாக நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் ஒரு ஓட்ட வித்தியாசத்தால் மும்பை சம்பியனாகியது.

இந்த வெற்றியின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த ரோஹித் ஷர்மா, ‘ இந்த போட்டியை இரசிகர்கள் நிச்சயம் உற்சாகமாக கண்டு இரசித்திருப்பர். வெற்றி பெறுவதற்கு இது போன்று சிறிய இலக்கை நிர்ணயிக்கும்போது முதலில் எமக்கு உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ பலமான துடுப்பாட்ட வரிசையை கொண்ட கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணியை வெற்றிபெற்றுள்ளோம். அவ்வாறு முடியும் என்றால் புனே அணியையும் எம்மால் தோற்கடிக்க முடியும். களத்தடுப்பில் சிறப்பாக செயற்படுங்கள், நம்பிக்கையை இழக்காதீர்கள் என அணியின் வீரர்களை ஊக்கப்படுத்தினேன்.

அதற்கேற்ப அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் புனே அணி வீரர்கள் ஓட்ட எண்ணிக்கையை குறைத்து நெருக்கடியை உருவாக்கினர்.

வெற்றிக்கான எல்லா புகழும் பந்து வீச்சாளர்களையே சேரும். குறைந்த இலக்கில் போராடி வெற்றி பெற்றதால் இந்த இறுதிப்போட்டி சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது’ என்றும் வெற்றிப் பெருமிதத்தில் கருத்துரைத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg