Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியலமைப்பு: அறிக்கை சமர்ப்பிப்பது குறித்து இறுதி தீர்மானம்

In இலங்கை
Updated: 05:44 GMT, May 23, 2017 | Published: 05:32 GMT, May 23, 2017 |
0 Comments
1195
This post was written by : Risha

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையின் வரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் 58ஆவது கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது. இதன்போது உறுப்பினர்களின் இணக்கப்பாடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த மூன்றாம் திகதி நடைபெற்ற வழிநடத்தல் குழுக்கூட்டத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக கலந்துரையாடப்பட்டு கொள்கையளவில் இணக்கப்பாட்டை எட்டிய விடயங்கள் மற்றும் உபகுழுக்களின் அறிக்கைகளில் முன்மொழியப்பட்ட விடயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையின் வரைபு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் 21 உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் பெரும்பாலும் உறுப்பினர்களின் கருத்துக்கள், முன்மொழிவுகள் அனைத்தும் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதோடு, இடைக்கால அறிக்கையின் வரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்து இறுதித்தீர்மானம் எடுக்­கப்­படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடைக்கால அறிக்கையின் வரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்பட்ட போதிலும், பொது இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் அச்செயற்பாடு தாமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg