Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுபல சேனாவின் அட்டகாசத்திற்கு நல்லாட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்: நஸீர்

In இலங்கை
Updated: 10:29 GMT, May 23, 2017 | Published: 09:45 GMT, May 23, 2017 |
0 Comments
1204
This post was written by : Vithushagan

பொதுபல சேனாவின் அட்டாகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதற்கான ஆவனங்களை கிழக்கு மாகாண சபை ஊடாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்ம நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 71ஆவது சபை அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சபையின் தவிசாளர் கலபதி தலைமையில் இடம்பெற்றது இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஆரிப் சம்சுடீன், உதுமாலெப்பை ஆகியோரினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள அநீதிகள் தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும், தெரிவிக்கையில்; ’மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சியின் போது, பேருவளையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பத்திற்கு பின் சிறுபான்மை மக்கள் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய மஹிந்தவை தோல்வியடைய வைத்து மைத்திரி அரசை கொண்டுவதந்தமைக்கு மிக பிரதான காரணம் இவ்வாறான இனாவாத செயலே ஆகும்.

அது போல், பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அன்மையில் மிக மோசமான முறையில் பிரதமரை தாக்கி பேசுவதை எம்மால் ஏற்க முடியாது அதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கவலையாக உள்ளது.

இந்த நல்லாட்சி அரசின் மூலம் இனங்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களுக்கு சம உரிமையே. இந்நல்லாட்சி ஊடாக வேறுபாடுகள்  இல்லை அவ்வாறு இருக்கவும் கூடாது,

 நாம் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் இலங்கை என்றால் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாகவும் அதிகம் கேட்கின்றார்கள் அவ்வாறு இலங்கை மோசமான நிலைக்கு மாறியுள்ளதா என்ற கவலை எமக்கு எழுகின்றது. நாம் மக்கள் பிரதிநிதிகள் மாகாண சபையிலும், நாடாளுமன்றிலும் பேசக்கூடிய அதிகாரம் எம்மிடம் உள்ளது.

ஆகவே, இவ்வாறாக இலங்கை சிறுபான்மை சமூகத்திற்கும், முஸ்லிம் மக்களுக்கும் எதிராக நடைபெறும் அநீதிகளை நல்லாட்சி அரசின் பங்காளிகளும், ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு துறை போன்றவை சரியான முறையில் நடவடிக்கை எடுத்து நல்லாட்சியில் இன ஒற்றுமையுடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்..

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg