Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51 கிலோ கஞ்சா மீட்பு!

In இலங்கை
Updated: 06:11 GMT, May 24, 2017 | Published: 05:37 GMT, May 24, 2017 |
0 Comments
1245
This post was written by : Ravivarman

யாழ்.வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோ 700 கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகள் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

கைவிடப்பட்டிருந்த மீன்பிடி படகு ஒன்றில் இருந்து இன்று (புதன்கிழமை) அதிகாலை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்படி கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடற்பரப்பில் நின்ற படகினை பரிசோதனை செய்தபோது இவை மீட்கப்பட்டுள்ளபோதும் இது தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

அத்துடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் கஞ்சா பொதிகளை பருத்தித்துறை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg