Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜார்கண்ட் மாநிலத்தில் ஏழு பேர் அடித்துக் கொலை!

In இந்தியா
Updated: 06:23 GMT, May 24, 2017 | Published: 05:55 GMT, May 24, 2017 |
0 Comments
1627
This post was written by : Shailu

ஜார்கண்ட் மாநிலத்தில் ஏழு பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் குழந்தை கடத்தல்காரர்கள் அதிகளவில் நடமாடி வருவதாகவும், தங்கள் குழந்தைகளை அவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும்படியும் வட்ஸப் சமூக வலைத்தளத்தில் வதந்தி ஒன்று பரவியுள்ளது.

இந்நிலையில் காட்சிலா எனும் பகுதியைச் சேர்ந்த முஹமது நயீம் என்பவர், தொழில்நிமித்தமாக தன்னுடைய நண்பர்கள் 4 பேருடன் சோபர்பூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். இதன்போது அவர்களின் காரை மறித்த மக்கள், அவர்கள் ஐவரையும் குழந்தை கடத்தல்காரர்கள் எனக் கருதி தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் முஹமது நயீம் உள்ளிட்ட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்பதற்கு முன்பாக, தாக்குதல் மேற்கொண்டவர்களிடம் தன்னை விட்டுவிடும்படி முஹமது நயீம் கைகூப்பி கெஞ்சும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

அத்தோடு இதேபோன்று கடந்த வாரமும் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் அப்பகுதி மக்களால்  அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவமானது, அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg