Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குல்பூஷன் ஜாதவின் இருப்பிடம் பற்றி தகவல் வழங்க பாகிஸ்தான் மறுப்பு!

In இந்தியா
Updated: 06:15 GMT, May 25, 2017 | Published: 05:14 GMT, May 25, 2017 |
0 Comments
1314
This post was written by : Shailu

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு இதுவரை தண்டனை நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான், அவரது இருப்பிடம் பற்றிய தகவல்களை தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

குல்பூஷன் ஜாதவின் மரணதண்டனை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் சர்வதேச நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை ஜாதவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் மேற்குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜாதவை சந்திக்க விருப்பம் தெரிவித்து, அவரது தாயார் அனுப்பிய கடிதத்தை பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகம் அந்நாட்டு வெளியுறவுச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ் வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறிய பாசித், பாகிஸ்தானை உளவுப்பார்த்த குற்றத்தை ஜாதவ் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்தினரால் இந்திய வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்றும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் உளவுப் பார்த்ததாகக் கூறி, அந்நாட்டு இராணுவ நீதிமன்றத்தால் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஜாதவிற்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg