Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் பார்க் ஜியூன் ஹை

In உலகம்
Updated: 06:13 GMT, May 25, 2017 | Published: 06:13 GMT, May 25, 2017 |
0 Comments
1492
This post was written by : Sylviya

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் ஜியூன் ஹை (Park Geun-hye), சியோலில் உள்ள மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாகவும் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இருப்பினும் பார்க் எவ்வித குற்றச்செயல்களையும் புரியவில்லை எனவும் அவர் நிரபராதி எனவும் தெரிவித்து பார்க்கின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

குறித்த பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் கருத்து தெரிவித்த போது, “பார்க் ஒரு நிரபராதி. அவரை கைதுசெய்து தடுப்புக்காவலில் வைத்திருப்பது அரச அடக்குமுறையை எடுத்துக்காட்டுகின்றது” என தெரிவித்துள்ளார்.

பார்க் மற்றும் அவரது தோழி சோய் சூன் – சில் ஆகியோர் சம்சுங் உள்ளிட்ட பிரபல வணிக நிறுவனங்களுடன் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், குறித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு குறைந்தது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைகளின் பொருட்டு சம்சுங் குழுவின் அதிகாரிகளில் ஒருவரான  ஜே வை லீயும் (Jay Y. Lee) இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பின்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் ஜனாதிபதி எனும் அவப்பெயரை பார்க் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg