Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை சுவீடன் தூதுவரிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

In இலங்கை
Updated: 17:50 GMT, May 25, 2017 | Published: 17:48 GMT, May 25, 2017 |
0 Comments
1359
This post was written by : Vithushagan

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை, இலங்கை, இந்தியா, பூட்டான், மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான சுவீடன் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான  இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

சுவீடன் தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு  இன்றையதினம் (வியாழக்கிழமை) நாடாளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இடம்பெற்றபோதே  அவர்  மேற்குறித்த விடயத்தை எடுத்துரைத்துள்ளார்.

மேலும் , நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் சுவீடன் தூதுவரிடம் இரா. சம்பந்தன்  எடுத்துரைத்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unnamed (12)
unnamed (11)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg